டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு மதுபாட்டில் குத்து
டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு மதுபாட்டில் குத்து விழுந்தது.
சிவகங்கை
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செட்டியதெருவை சேர்ந்த வீரபத்திரன் மகன் பூமிநாதன் என்ற ராஜேஷ் (வயது 24). தொழிலாளி. திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு மேற்பார்வையாளர் வள்ளியப்பன் (48) இன்னும் பணம் வேண்டும். இந்த பணத்திற்கு நீங்கள் கேட்கும் மதுபாட்டில் தர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அருகில் கிடந்த காலி மதுபாட்டிலை உடைத்து வள்ளியப்பனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வள்ளியப்பன் திருப்பத்தூர் நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தார்.
Related Tags :
Next Story