சரக்கு வேன் கவிழ்ந்து பஞ்சாப் வாலிபர் பலி


சரக்கு வேன் கவிழ்ந்து பஞ்சாப் வாலிபர் பலி
x

சின்னாளப்பட்டி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து பஞ்சாப் மாநில வாலிபர் பலியானார்.

திண்டுக்கல்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 28). இவர், தனது மனைவி லேகா பாய் (25), மகள் நிஷா (1½) ஆகியோருடன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சிப்காட்டில் கோபிநாத் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், சிப்காட்டில் இருந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்றார்.

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டி என்னுமிடத்தில் சரக்கு வேன் சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே கோபிநாத் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story