புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் மாட்டு இறைச்சி கடையை அகற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் மாட்டு இறைச்சி கடையை அகற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் மாட்டு இறைச்சி கடையை நகராட்சி அகற்றியதை கண்டித்து சமூக நீதி கட்சி, புரட்சி தமிழ் புலிகள் கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழ் ராசு, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முஹசீன் காமினூன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story