புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


புன்னக்காயல்   தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் 471-வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பக்தர்கள் கொடிகளை பவனியாக கொண்டு வந்து கொடிமரம் அருகே வைத்தனர். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார், நற்செய்தி நடுவத்தின் இயக்குனர் ஸ்டார்வின் அடிகளார், சிங்கித்துறை பங்குத்தந்தை சிபாகர் அடிகளார், நட்டார்குளம் பங்குத்தந்தை பிளேவியன் அடிகளார், புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், உதவி பங்குத்தந்தை ஜெபஸ்டின் அடிகளார், ஆகியோர் கொடியேற்றினர். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும். வருகிற 7-ந் தேதி புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்- சிறுமியர் புது நன்மை பெறும் சிறப்பு நிகழ்ச்சியும், 8-ந் தேதி காலை 10 மணிக்கு தூய ராஜகன்னி மாதாவிற்கு மகுடம் அணிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து மாலையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவில் ராஜகன்னி மாதா ஆலய தேர் பவனியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், உதவி பங்குத்தந்தை ஜெபஸ்டின் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டியினர், கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்துள்ளனர்.


Next Story