தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள்


தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகள்
x

தரங்கம்பாடியில் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகளை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் சுய உதவி குழுவினை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் நிவேதா முருகன், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் 10 தள்ளுவண்டிகளை வழங்கினார். விழாவில் துணைத் தலைவர் பொன்ராஜேந்திரன், இளநிலை உதவியாளர் குணசுந்தரி, மத்திய அரசின் வரித்தண்டலர் கருணாநிதி, வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள், சுய உதவி குழு தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---



Next Story