நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி


நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி
x

செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் கொடை விழா கடந்த 17-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனை, வில்லிசை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா கடந்த 24-ந்தேதி நடந்தது. அன்று பொங்கலிடுதல், முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலம், சப்பர வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 8-ம் நாள் பூஜையன்று காலை ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடந்தது. இரவில் அம்பாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story