அய்யப்பனுக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாஞ்சலி


அய்யப்பனுக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாஞ்சலி
x

ஜடையனூர் கிராமத்தில் அய்யப்பனுக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா ஜடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில், சபரிமலையில் அய்யப்பனுக்கு நடைபெறும் ஒரு நாள் நிகழ்ச்சி முழுவதும் அப்படியே கேரள நம்பூதிரிகளை கொண்டு பூஜைகள் நடைபெற்றது. காலையில் கணபதி பூஜை, நெய் அபிஷேகம், தொடர்ந்து சாமிக்கு கற்பூர மகா தீபாரதனை, படி பூஜையும், மல்லி, முல்லை, சாமந்தி, துளசி, ரோஜா என ஒரு டன் பூக்களால் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story