சாராயம் விற்றால் போலீசில் ஒப்படைப்பதாக பேனர் வைப்பு


சாராயம் விற்றால் போலீசில் ஒப்படைப்பதாக பேனர் வைப்பு
x

சாராயம் விற்றால் போலீசில் ஒப்படைப்பதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி சாராய ஊறல், சாராயத்தை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது வருகிறார். இந்தநிலையில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சியில் சாராயம் விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைப்போம் என ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள் பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் கூட்ரோடு பகுதியிலும், பொன்னேரி பஸ் நிறுத்தத்திலும் பேனர் வைத்துள்ளார். நிகழ்ச்சி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கலந்துகொண்டார். ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், மண்டலவாடி ஊராட்சி மன்ற தலைவர் எம். மகேந்திரன், ரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பொன்னேரி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story