சத்திரப்பட்டியில் வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


சத்திரப்பட்டியில் வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

சத்திரப்பட்டியில் வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திண்டுக்கல்

சத்திரபட்டியை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி (வயது 25). இவரது நண்பர்களான கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சித்தார்த் (25), திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த அஜித் (25) ஆகியோர் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சத்திரப்பட்டிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பழனிக்கு சென்றனர். ேமாட்டார் சைக்கிளை சித்தாத் ஓட்டினார். சத்திரபட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது பழனியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இ்டத்திலேயே சித்தார்த் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த சத்திரப்பட்டி போலீசார், காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story