மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் தனி தாசில்தாரை அணுகலாம் கலெக்டர் தகவல்


மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் தனி தாசில்தாரை அணுகலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் தனி தாசில்தாரை அணுகலாம் என கலெக்டர் தொிவித்துள்ளாா்.

கடலூர்

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாது காப்பு திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் அரசாணைபடி 1,000 ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18 ஆயிரத்து 47 மாற்றுத் திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்க பெறாத சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீத மாற்றுத்திறன் உடையோர் யாரேனும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story