வலையில் சிக்கிய மலைப்பாம்பு
வலையில் சிக்கிய மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
கன்னியாகுமரி
கொல்லங்கோடு,
வைக்கல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பழுதடைந்த வலை ஒன்று கிடந்தது. இந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது. இதனை நேற்று காலையில் ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பொதுமக்கள் அங்கு கூடி மலைப்பாம்பை வலையோடு இழுத்து கரை பகுதிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 15 அடி நீளம் உடையது. இதே இடத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story