கேள்வி-பதிலாக வாக்குமூலம் பெற்றது சட்டத்துக்கு முரணானது: பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் பெண் நீதிபதிகளே வாக்குமூலம் பெற வேண்டும்- சுற்றறிக்கை அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கேள்வி-பதிலாக வாக்குமூலம் பெற்றது சட்டத்துக்கு முரணானது: பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் பெண் நீதிபதிகளே வாக்குமூலம் பெற வேண்டும்- சுற்றறிக்கை அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் பெண் நீதிபதிகள்தான் வாக்குமூலம் பெற வேண்டும். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்புமாறு டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் பெண் நீதிபதிகள்தான் வாக்குமூலம் பெற வேண்டும். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்புமாறு டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மகளுக்கு பாலியல் தொந்தரவு

கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

தற்போது சிறையில் உள்ள அவர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை க்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கின் குற்றபத்திரிகை கன்னியாகுமரி மாவட்ட போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றார்.

வாக்குமூலம்

இதனை தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் பெறப்பட்டுள்ள வாக்குமூலத்தை பார்க்கும்போது ஏதும் நடக்காதது போல் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தெரிவித்துள்ளார். எனவே மனுதாரர் ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

அந்த சிறுமியிடம் கீழ்க்கோர்ட்டு நீதிபதி, கேள்வி-பதில் அடிப்படையில் வாக்குமூலம் பெற்று இருப்பது சட்டத்துக்கு முரணானது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆண் நீதிபதி வாக்குமூலம் பெற்று இருப்பதும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது. இதுபோன்ற வழக்குகளில் பெண் மாஜிஸ்திரேட்டுதான் சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும் என்றும் பலமுறை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

பெண் நீதிபதிகள்

எனவே பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பெண் நீதிபதிகள்தான் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட வாக்குமூலம் சீலிடப்பட்டு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி, பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களை, பெண் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் எடுக்கும்படி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

Next Story