வினாடி- வினா போட்டி


வினாடி- வினா போட்டி
x

நெல்லையில் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை:

குற்றாலம் செய்யது ஹில் வியூ பள்ளியில் மதரசாக்களுக்குள் இஸ்லாமிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் 12-க்கும் மேற்பட்ட மதரசாக்கள் பங்கேற்றனர். பள்ளி தலைவர் பத்ஹூர் ரப்பானி, செயலர் செய்யது ரப்பானி, ஆட்சிக்குழு உறுப்பினர் செய்யது நவாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர். குற்றாலம் செய்யது மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அரபிக் ஆசிரியர் பீர்முகம்மது, தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி இமாம் அமீர்ஜான் பிர்தவுசி ஆகியோர் நடுவராக பங்கேற்றனர்.

போட்டியில் செய்யது ஹில்வியு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல் பரிசையும், வடகரை அலியாவுல் அரபி மதரசா 2-வது பரிசையும், வடகரை மனாருல் ஹூதா அரபி மதரசா 3-வது பரிசையும் பெற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை நசீம்பானு வரவேற்றார். ஆசிரியை பாத்திமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை சுப்புசெல்வி நன்றி கூறினார். செய்யது ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செய்யது குழும மேலாளர்கள், செய்யது வெல்பர் சொசைட்டி மேலாளர் ஆதம்பாவா ஆகியோர் விழா சிறக்க வாழ்த்தினர். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story