திருப்பூரில் மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பை அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி ருக்குமணி (வயது 69). இவர் நேற்று காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி திடீரென ருக்குமணி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமி சங்கிலியுடன் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ருக்குமணி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பெண்களை குறித்து நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.