மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் முயல்கள்


மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் முயல்கள்
x

ஆலங்குளம் அருகே மக்காச்சோளத்தை முயல்கள் சேதப்படுத்தி வருகிறது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே மக்காச்சோளத்தை முயல்கள் சேதப்படுத்தி வருகிறது.

மக்காச்சோளம் சாகுபடி

ஆலங்குளம் அருகே உள்ள தொம்பகுளம், ஆர்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை சரியான காலத்தில் இல்லாததால் 2 முறை மக்காச்சோளம் விதைகளை ஊன்றி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளமானது தற்ேபாது 4 மாத பயிராக உள்ளது. பொட்டாஷ், டி.ஏ.பி. காம்ப்ளக்ஸ், யூரியா ஆகிய உரங்களை போட்டு செடியை காப்பாற்றி வருகின்றனர். தற்போது நன்கு வளர்ந்த மக்காச்சோள வயலுக்குள் முயல்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

முயல்களால் சேதம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடன் வாங்கி விவசாயம் செய்தும் முழுவதுமாக மகசூலை பெற முடியாத நிலை உள்ளது. மக்காச்சோளம் சாகுபடி செய்த நாள் முதல் தற்போது வரை பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். நோய் தாக்குதல் ஒருபுறம், கிளி, முயல் போன்றவற்றின் தாக்குதல் மறுபுறம் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயல்களால் பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், முயல்கள் தாக்குதலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story