முயல்களை நாய்கள் கடித்து குதறின
முயல்களை நாய்கள் கடித்து குதறின.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நாய்கள் அதிகமாக உள்ளதால் தொடர்ந்து பொதுமக்கள், கால்நடைகளை நாய்கள் கடித்து குதறி வருகிறது. நாய்கள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகி உள்ளது. மேலும் நாய்களுக்கு நோய்கள் ஏற்பட்டு ஏராளமான நாய்கள் தோலில் முடிகள் உதிர்ந்து உடல் முழுவதும் புண்ணுடன் உடல் மெலிந்து காணப்படுகிறது. மேலும் திருமண மண்டபங்களில் இருந்து அள்ளப்படும் இலை குப்பைகளில் உள்ள உணவை திண்பதற்காக மொத்த நாய்களும் ஒன்று கூட அந்தப் பகுதியில் நிற்கும் கால்நடைகளை கடித்து குதறுகிறது. அதே போல நேற்று கீரமங்கலம் வடக்கு பகுதியில் குப்பை கொட்டும் பகுதியில் கூடிய நாய்கள் அந்தப் பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்து ஏராளமான வளர்ப்பு முயல்களை கடித்து குதறி கொன்றுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
Related Tags :
Next Story