பெரியநெகமத்தில் வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
பெரியநெகமத்தில் வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
நெகமம்
பெரியநெகமம், நாகர் மைதானத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோகனா திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான முகாம் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சபரி கார்த்திகேயன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, பொள்ளாச்சி கால்நடை உதவி இயக்குனர் ஓம் முருகன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில், 132 நாய் மற்றும் பூனைகளுக்கு, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் வராமல் இருக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நெகமம் அரசு பெண்கள் பள்ளியில், ரேபிஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து அங்குள்ள மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.