வெறிநாய் தடுப்பூசி முகாம்


வெறிநாய் தடுப்பூசி முகாம்
x

சமூகரெங்கபுரத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வெறிநாய் தடுப்பூசி முகாம் சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது. கால்நடை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள் முன்னிலை வகித்தார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் உதவி இயக்குனர் (அம்பை கோட்டம்) தங்கராஜ், கால்நடை உதவி மருத்துவர் சத்யபிரபா, சூர்யா, தண்டபாணி, கால்நடை ஆய்வாளர் ரகுமான்கான், கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில் குமார், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story