வெறிநோய் தடுப்பூசி முகாம்


வெறிநோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆச்சாள்புரம் கிராமத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி முகாம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் வினோஷாகருணாகரன் தொடங்கி வைத்தார். சாமியம் அரசு கால்நடை டாக்டர் எஸ்வந்த்ராவ், கால்நடை உதவி அலுவலர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வளர்ப்பு நாய்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பு ஊசி செலுத்தினர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட பிராணிகளுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.


Next Story