வெறிநோய் தடுப்பூசி முகாம்
மூலைக்கரைப்பட்டியில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் பொன்னுவேல் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ், மூலைக்கரைப்பட்டி கால்நடை டாக்டர் ரஞ்சித் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்தினா ஜெபராணி, உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story