மாட்டு வண்டி போட்டி


மாட்டு வண்டி போட்டி
x

ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அதில் அவர், முதல் பரிசு பெற்ற வண்டிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார்.

மதுரை


ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அதில் அவர், முதல் பரிசு பெற்ற வண்டிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார்.

மாட்டுவண்டி போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஒராண்டு சாதனையை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது. இந்த போட்டி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட மேற்கு (வடக்கு) ஒன்றிய தி.மு.க. சார்பாக மதுரை ஊமச்சிகுளத்தில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி மாட்டு வண்டி போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் பெரிய மாடு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சிறிய மாடு 6 கிலோ மீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இந்த 2 பிரிவுகளிலும் தனித்தனியே 3 சுற்றுகளாக, ஒவ்வொரு சுற்றிலும் தலா 22 மாட்டு வண்டிகளில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பெரியமாடு பிரிவில் முதல் பரிசு ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 99 வழங்கப்பட்டன. 2-வது பரிசு ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 99ம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 99-ம் வழங்கப்பட்டன.

பரிசு

அதே போல் சிறியமாடு பிரிவில் முதல் பரிசு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 99ம், 2-ம் பரிசு ரூ.1 லட்சத்து 99-ம், 3-ம் பரிசாக ரூ.75 ஆயிரத்து 99-ம் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற சாரதிகளுக்கு பெரியமாடு பிரிவில் கொடி பரிசு ரூ.5 ஆயிரத்து 99-ம், எல்கை பரிசு ரூ.5 ஆயிரத்து 99ம் வழண்ட்கப்பட்டன. இந்த போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி, போட்டி முடியும் வரை அங்கிருந்து அதனை கண்டுகளித்தார். முடிவில் பெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் சாரதிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story