சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்


சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்
x

சாயல்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே செவல்பட்டி கிராமத்தில் கருப்பசாமி கோவில் வருடாந்திர பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடுமாடு, சிறிய மாடு என இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 வண்டிகள் பந்தய வீரர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மாட்டுவண்டி பந்தயத்தில் சாரதி விபத்தில் சிக்கினார். இந்த நிலையில் சாரதி இல்லாமல் வெற்றி இலக்கை நோக்கி தன்னந்தனியாக மாட்டு வண்டி சீறிப்பாய்ந்தது. இதனால் சாலையில் இருபுறமும் இருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


Next Story