மாடுவிடும் விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்


மாடுவிடும் விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

பொய்கை மோட்டூரில் நடந்த மாடு விடும் விழாவில் 300 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. மாடு முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

காளை விடும் விழா

அணைக்கட்டு தாலுகா பொய்கையை அடுத்து மோட்டூர் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் வேண்டா உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொணடனர். ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எல்.இளவழகன், பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அக்னி வேல்முருகன், கோவில் தர்மகர்த்தா மனோகரன், பிரதாபன், நாட்டாண்மை துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோ.குமாரபாண்டியன் வரவேற்றார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 காளைகள் கொண்டுவரப்பட்டன. கால்நடை மருத்துவக்குழுவினர் காளைகளை பரிசோதனை செய்ததை தொடர்ந்து வாடி வாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. காளை ஓடும் பாதையில் ஏராளமான இளைஞர்கள் நின்றுகொண்டு காளைகளை உற்சாகப்படுத்தினர்.

12 பேர் காயம்

அப்போது காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமில்இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

குடியாத்தம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் காளை வேகமாக ஓடியது. ப்போது அங்கிருந்த விவசாய கிணற்றில் பாய்ந்து விட்டது. அதை இளைஞர்கள் உயிருடன்மீட்டனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அந்த காளை அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபியது.

முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.50 ஆயிரம், நான்காவது பரிசாக ரூ.40 ஆயிரம் என 73 பரிசுகள் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொய்கை மோட்டூர் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story