மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்


மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே சின்னூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித உலகமயமாதா ஆலய 50-ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சீறிப்பாய்ந்தது

இந்த பந்தயமானது சின்ன மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு 5 கி.மீ. தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. பந்தயம் தொடங்கியதும் காளைகள் சீறிப்பாய்ந்து சென்று இலக்கை அடைந்தன. இதை சாலையோரம் நின்று ஏராளமான பொதுமக்கள் பார்த்து ஆரவாரம் செய்தனர்.

இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Next Story