மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:06+05:30)

முதுகுளத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story