"வெள்ள பாதிப்புகள் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார் " - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
டெல்லியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை,
கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். பிரதமர் மோடியை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார் .கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்
பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி முதல்-அமைச்சர் சார்பாக வலியுறுத்தினேன். ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருடைய பாதயாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்தேன். தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். என தெரிவித்தார்.