சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் சோதனை
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் சோதனை நடந்தது.

திருவண்ணாமலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் திருச்சி ரெயில்வே கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரிமுத்து தலைமையில் போலீசார் மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனர்.

இதில் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடைமைகள், ரெயில்வே பாதை, ரெயில்வே பாலம், ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் சோதனை செய்யப்பட்டது.

மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தின் வழியாக சென்ற காய்ச்சகோடாவை நோக்கி செல்லும் ரெயிலிலும் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் வரை நடைபெற உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story