8 பெட்டிகளுடன் ெரயிலை இயக்கி சோதனை


8 பெட்டிகளுடன் ெரயிலை இயக்கி சோதனை
x

8 பெட்டிகளுடன் ெரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி வரையில் கடந்த 2010-ம் ஆண்டு வரை மீட்டர்கேஜ் பாதையில் ெரயில் இயங்கி வந்தது. இதை அகல ெரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு முதல் மீட்டர்கேஜ் ெரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அகல ெரயில் பாதை அமைக்கும் பணி சுமார் ரூ.450 கோடி மதிப்பில் நடைபெற்று வந்தது. தற்போது தேனி வரையில் அகல ெரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக மதுரை-தேனி வரை இயக்கக்கூடிய ெரயில் சேவையை பிரதமர் மோடி நாளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த வழித்தடத்தில் நேற்று 8 பெட்டிகள் கொண்ட ெரயில் முன்னோட்ட அடிப்படையில் இயக்கி சோதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று(புதன்கிழமை) தென்னக ெரயில்வே மேலாளர் ஆய்வு செய்கிறார். பின்னர் நாளை முதல் மதுரை-தேனி வரையில் ெரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story