தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டது: குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கம்
ரெயில்வே ஊழியர்கள் துரிதமுடன் செயல்பட்டு தண்டவாள விரிசலை சரி செய்தனர்.
சென்னை,
சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையேயான ரெயில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தாம்பரம் கடற்கரை மார்க்கமாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரெயில்வே ஊழியர்கள் துரிதமுடன் செயல்பட்டு தற்காலிகமாக சரி செய்தனர். இதனை தொடர்ந்து தற்போது அப்பகுதியில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story