20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29-ந் தேதிதிருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடக்கம்


20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29-ந் தேதிதிருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:45 AM IST (Updated: 18 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர்

20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரெயில் போக்குவரத்து நடந்து வந்தது. தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட இந்த வழித்தடம் ஒரு காலத்தில் வியாபாரிகளுக்கு பயனுள்ள வகையில் இருந்தது.

கரியாப்பட்டினம், குரவப்புலம், வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து நெல், உப்பு, கருவாடு உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

வருகிற 29-ந் தேதி தொடக்கம்

இந்த வழித்தடத்தை அகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அகலப்பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு(2022) அக்டோபர் மாதம் 22-ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருத்துறைப்பூண்டி-அகஸ்த்தியம்பள்ளி இடையே ரெயில் சேவையை தொடங்குகிறது. இதற்கான ரெயில் சேவை நேரம் குறித்த கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

ரெயில் புறப்படும் நேரம்

வாரத்தில் 5 நாட்கள்(திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) காலை 6.45 மணிக்கும், மதியம் 3.30 மணிக்கும் திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டு செல்லும்.

அதேபோல் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55 மணி மற்றும் மாலை 4.40 மணிக்கு ரெயில் புறப்படும். இந்த ரெயில் தற்போது இயக்கப்பட்டு வரும் திருவாரூர்-காரைக்குடி- திருவாரூர் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக அமையும்.

20 ஆண்டுகளுக்கு பிறகு...

இதுகுறித்து தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட ரெயில் உபயோகிப்போர் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கரன் கூறுகையில் 'ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடங்க முன் வந்துள்ள தெற்கு ரெயில்வேக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதே நேரத்தில் இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக நாகை, மயிலாடுதுறை, திருச்சி மார்க்கத்தில் ரெயில் சேவை நீட்டிக்கப்பட வேண்டும். அல்லது இணைப்பு ரெயில் இயக்க வேண்டும். இந்த ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுத்த செல்வராஜ் எம்.பி., திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை இயக்கவியல் மேலாளர் வணிக மேலாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் திருமால் மற்றும் அனைத்து அமைப்புகளுக்கும் பாராட்டுக்கள்.

கேட் கீப்பர்கள்

அதே நேரத்தில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி, திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி மார்க்கத்தில் தேவைப்படும் இடங்களில் கேட்கீப்பர்களை உடனடியாக பணியமர்த்தி, போதுமான ரெயில் சேவையை தொடங்க வேண்டும்' என்றார்.


Next Story