தூத்துக்குடியில் 15-ந் தேதி காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம்


தூத்துக்குடியில் 15-ந் தேதி காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

ராகுல் காந்தி பதவி பறிப்பு

தூத்துக்குடியில் நேற்று காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பா.ஜனதா அரசு தயாராக இல்லாத நிலையில் மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

ரெயில் மறியல் போராட்டம்

மத்திய அரசு அளித்துள்ள சலுகைகள் காரணமாக அதானி நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. இதை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பதற்காக தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அதுபோல் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடியில் ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ெரயில் மறியல் போராட்டமும், அதுபோல் வருகிற 30-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் மற்றும் கோபால், சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.





Next Story