உடுமலை வழியாக 120 கிலோமீட்டர்வேகத்தில் ெரயில் சோதனை ஓட்டம்
திண்டுக்கல்-பாலக்காடு இடையே உடுமலை வழியாக 120 கிலோமீட்டர் வேகத்தில் ெரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.
ெரயில் பயணம்
நீண்ட தூரப் பயணங்களுக்கு அலுப்பில்லாமல் பயணம் செய்ய நினைப்பவர்களின் தேர்வாக ெரயில் பயணம் உள்ளது.குறைந்த கட்டணம், உணவு, கழிவறை வசதி உள்ளிட்டவை கிடைப்பதும் பயணிகள் ஆர்வம் காட்டுவதற்கான காரணங்களாக உள்ளன. உடுமலை பகுதியிலிருந்து நீண்ட தூர ெரயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனாலும் எந்தெந்த ெரயில்கள் எந்தெந்த நேரங்களில் இயக்கப்படுகிறது என்பது குறித்து முறையான தகவல்கள் பொதுமக்களுக்கு சென்று சேராதது பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு தடையாக உள்ளது. உடுமலை வழியாக செல்லும் ெரயில் வழித்தடம் அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு கூடுதல் ெரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அகலப்பாதையாக மாற்றுவதற்கு முன் இயக்கப்பட்ட ரெயில்கள் கூட முழுமையாக இயக்கப்படவில்லை என்பது பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.
120 கிலோமீட்டர் வேகத்தில்
இந்த நிலையில் படிப்படியாக ெரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறைவது பயணிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக 120 கிலோமீட்டர் வேகத்தில் ெரயிலை இயக்கி இன்று (புதன் கிழமை) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் திண்டுக்கல் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ெரயில் 11.30 மணியளவில் பாலக்காடு சென்று சேரும் வகையில் இயக்கப்படும்.அதாவது சுமார் 180 கிேலாமீட்டர் தூரம் உள்ள இந்த பாதையை சுமார் 3 மணி நேரத்தில் கடக்கும் வகையில் இயக்கப்படும்.