பாம்பன் புதிய ரெயில் பால பணிகளை ரெயில்வே ஆணைய செயல் இயக்குனர் ஆய்வு


பாம்பன் புதிய ரெயில் பால பணிகளை ரெயில்வே ஆணைய செயல் இயக்குனர் ஆய்வு
x

பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை ரெயில்வே ஆணைய செயல் இயக்குனர் படகு மூலம் சென்று ஆய்வு நடத்தினார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை ரெயில்வே ஆணைய செயல் இயக்குனர் படகு மூலம் சென்று ஆய்வு நடத்தினார்.

பாம்பன் பால பணி

பாம்பன் கடலில் 105 ஆண்டுகளை கடந்த பழமையான ரெயில் பாலத்தின் அருகில் வடக்கு கடல் பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து நேற்று ரெயில்வே ஆணையத்தின் செயல் இயக்குனர் வி.பி.சிங் பாம்பனுக்கு வந்தார்.

பின்னர் அவர் படகு மூலம் அதிகாரிகளுடன் கடலுக்குள் சென்று புதிய ரெயில் பாலத்திற்காக கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தூண்களையும் அதன் மீது பொருத்தப்பட்டுள்ள இரும்பு கர்டர்களையும் பார்வையிட்டார்.

80 சதவீதம் நிறைவு

மேலும் புதிய தூக்குப்பாலத்தை இயக்குவதற்காக கடலுக்குள் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் ஆர்.வி.என்.எல் துணை பொது மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் இதுவரை 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மழை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக புதிய ரெயில் பாலத்தின் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆர்.வி.என்.எல். அதிகாரிகள் ரெயில்வே ஆணைய அதிகாரியிடம் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story