ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஊர்வலம்


ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஊர்வலம்
x

ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஊர்வலம்

திருநெல்வேலி

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லிக்கு மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்லும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு குறித்தும், சேவை குறித்தும் ரெயில் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் எடுத்து கூறினர். ஆகஸ்டு மாதம் டெல்லி சென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் மதுரை கோட்டத்தில் 10 ரெயில் நிலையங்களை தேர்ந்தெடுத்து அங்கு செல்வதாகவும், அது போல தியாகிகள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.


Next Story