கோவில்பட்டியில்ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


கோவில்பட்டியில்ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில்ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹரிஹர சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகையா வரவு -செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி செயலாளர் தங்கவேலு, மகளிர் அணி தலைவி பட்டம்மாள், மற்றும் நிர்வாகிகள் பேசினா். இக்கூட்டத்தில், ரெயில்வே ஓய்வூதியர்களுக்கு நிலையான மருத்துவ படி ரூ. 2ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பணமற்ற மருத்துவ சிகிச்சையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.15 லட்சமாக நிர்ணயிக்க வேண்டும். பென்ஷன் விதிகளை முறைப்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story