பெண் பயணியை வெளியேற்றிய ெரயில்வே பாதுகாப்பு போலீசார்


பெண் பயணியை வெளியேற்றிய ெரயில்வே பாதுகாப்பு போலீசார்
x

ரெயில் நிலையத்தில் பெண் பயணியை வெளியேற்றிய ெரயில்வே பாதுகாப்பு போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் இருந்து நாங்குநேரிக்கு இரட்டை ெரயில்பாதை ஆய்வு பணிக்காக தென் சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயகுமார் ராய் வள்ளியூருக்கு நேற்று வந்திருந்தார். இதனால் பகல் நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ெரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனை அறியாமல் சேரன்மகாதேவியை சேர்ந்த ரேவதி என்ற பெண் திருப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அப்போது ெரயில்வே நிலையத்தில் அதிகாரிகளும், ஊழியர்களும் காத்திருந்த வேளையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ெரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த போலீசார் அந்தப் பெண்ணை ெரயில் நிலையத்தில் நிற்க விடாமல் வெளியேற்றியுள்ளனர்.

பாதுகாப்பு ஆணையர் ஆய்வு முடித்துவிட்டு சென்ற பின்பு அந்த பெண் இரவு 10 மணி கோவை ெரயிலுக்கு செல்வதற்காக மீண்டும் உள்ளே வந்து காத்திருந்தபோது ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீண்டும் அந்த பெண்ணை வெளியேற்ற முயன்றனர். அப்போது ரேவதி அழுதவாறு தவித்து நின்றார். அங்கு நின்ற சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்ைப ஏற்படுத்தியது.


Next Story