தாம்பரம் ரெயில் நிலையத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே எஸ்ஐ சஸ்பெண்ட்..
தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நேற்றிரவு, அவர் தாம்பரம் ரயில் நிலைய சுரங்க பாதையில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது பெண்ணின் உறவினர் ஒருவர் சப் இன்ஸ்பெக்டரை தட்டிக்கேட்டபோது, சப் இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டரை போலீசார் விசாரித்து வந்தனர். தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சஸ்பெண்ட் செய்து ரெயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story