கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள்
ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
திருச்சி
திருச்சி கோட்ட வணிக நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யு., சி.ஐ.டி.யு. தொழிற்சங்க டெப்போ சூப்பர்வைசர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் 3 மணிநேரத்துக்கு ஒருமுறை வருவாய்நிலை காட்டாவிட்டால் பணியிடமாற்றம் செய்வது, ரெயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிகப்படியான வருமானம் காட்டவில்லை எனக்கூறி 11 டிக்கெட் பரிசோதகர்களுக்கு உடனடி உத்தரவு மூலம் நடவடிக்கை எடுத்தது, குறைவாக வருமானம் காட்டியவர்கள் என 44 டிக்கெட் பரிசோதகர்களின் ஏப்ரல் மாத போக்குவரத்து படிக்காக உதவி வணிக மேலாளரை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவைகளை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story