சின்னசேலம் அருகே ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி அதிகாரிகள் ஆய்வு
சின்னசேலம் அருகே ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்த பணியை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சேலம் ரெயில்வே கோட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து அம்மையகரம் ரெயில்வே கேட் வரை 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் தண்டவாளம் பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணிகளை சேலம் கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பராமரிப்பு பணியையொட்டி நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அம்மையகரம் சர்வீஸ் சாலையிலும், அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகிலும் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்த எச்சரிக்கை பதாகை வைத்து வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மேலும் பராமரிப்பு பணி காரணமாக மேற்கண்ட ரெயில் தடத்தில் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story