ரெயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
கரூர் சதன்ரெயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ரெயில் நிலையம் முன்பு ேநற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் கணேசன், ராஜசேகர், பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அக்னிபத் திட்டத்தை தடை செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். லாபம் ஈட்டித்தரும் ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story