பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
x

பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் கோடை வெயில் இன்னும் குறையாத நிலையில் வெப்பத்தால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் இன்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, சவளக்காரன், காரிகோட்டை, மேலவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகளும் தற்போது பெய்துள்ள திடீர் மழை பயனுள்ளதாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இதேபோல் திருமக்கோட்டை பகுதியிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.


Next Story