கொல்லிமலையில் கொட்டித்தீர்த்த கனமழை-46 மில்லிமீட்டர் பதிவு
கொல்லிமலையில் கனமழை கொட்டித்தீர்த்தது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதையொட்டி சோளக்காட்டில் இருந்து செம்மேடு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது. இதேபோல் ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 7 மணி வரை பெய்த மழையளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை செம்மேடு-46, சேந்தமங்கலம்-24, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-21, ராசிபுரம்-18, குமாரபாளையம்-11, நாமக்கல்-9, புதுச்சத்திரம்-9, எருமப்பட்டி-5, திருச்செங்கோடு-2.
Related Tags :
Next Story