வரட்டுப்பள்ளத்தில் 80 மி.மீட்டர் மழைப்பதிவு


வரட்டுப்பள்ளத்தில்   80 மி.மீட்டர் மழைப்பதிவு
x

வரட்டுப்பள்ளத்தில் 80 மி.மீட்டர் மழைப்பதிவு

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக ஈரோடு பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்றதால் வியாபாரிகளும், காய்கறிகளை வாங்க வந்தவர்களும் அவதி அடைந்தனர். மாவட்டத்தை பொறுத்தவரை வரட்டுப்பள்ளம் பகுதியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. இதேபோல் ஈரோட்டில் 13 மில்லி மீட்டரும், அம்மாபேட்டையில் 11 மில்லி மீட்டரும், தாளவாடியில் 8.4 மில்லி மீட்டரும், குண்டேரிப்பள்ளம் பகுதியில் 7.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.


Related Tags :
Next Story