சென்னிமலை கோவில் அடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்தது


சென்னிமலை கோவில் அடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்தது
x

சென்னிமலை கோவில் அடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்தது

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் மலைக்கோவில் செல்லும் பாதையின் அடிவாரத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று நேற்று காலையில் திடீரென முறிந்து விழுந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் கோவிலுக்கு சென்று வந்தாலும் நல்ல வேலையாக மரம் விழுந்த போது யாரும் அந்த வழியாக செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரம் முறிந்து ரோட்டிலேயே விழுந்ததால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பேரூராட்சி கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.


Related Tags :
Next Story