கோபியில் 42.4 மி.மீட்டர் மழைப்பதிவு
கோபியில் 42.4 மி.மீட்டர் மழைப்பதிவு
ஈரோடு
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமப்படுகிறார்கள். நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஈரோட்டிலும் சுமார் 30 நிமிடம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. கோபிசெட்டிபாளையத்தில் அதிகபட்சமாக 42.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.
இதேபோல் பவானியில் 32 மில்லி மீட்டரும், ஈரோட்டில் 30 மில்லி மீட்டரும், கவுந்தப்பாடியில் 24.2 மில்லி மீட்டரும், குண்டேரிப்பள்ளம் பகுதியில் 8.2 மில்லி மீட்டரும், வரட்டுப்பள்ளம் பகுதியில் 7 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story