சிங்கம்புணரி பகுதியில் கனமழை
சிங்கம்புணரி பகுதியில் கனமழை பெய்தது.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கனமழை பெய்தது. சிங்கம்புணரி நகர் மற்றும் அணைக்கரைப்பட்டி, கிருங்கா கோட்டை, முட்டாகட்டி, பிரான்மலை, வேங்கை பட்டி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், மருதிபட்டி, முறையூர், சூரக்குடி, கல்லம்பட்டி, கண்ணமங்கலபட்டி போன்ற சுற்றுவட்டார கிராமம் முழுவதும் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. கால்வாய்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் நிலத்தடி நீர் உயரும் பட்சத்தில் மீண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவ்வாறு ஏற்பட்டால் இந்த பகுதியில் விவசாயிகள் இந்த ஆண்டு விவசாயத்திற்கான சிறப்பான ஆண்டாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story