அம்மாபேட்டையில் பலத்த மழையால் வீடு இடிந்தது
அம்மாபேட்டையில் பலத்த மழையால் வீடு இடிந்தது
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் சரசாள் (வயது 55) கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென சரசாளின் வீட்டு ஓடுகள் சரிந்து விழுந்தன. பக்கவாட்டு சுவர் விரிசலடைந்து இடிந்து விழுந்தது. உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த சரசாள் மற்றும் அவருடைய மகன், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். எனினும் சரசாளுக்கு தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் இடிந்து விழுந்த வீட்டை அம்மாபேட்டை வருவாய் ஆய்வாளர் ரதி, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜூலி பெரியநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது சரசாள் சேதம் அடைந்த வீடு மற்றும் வீட்டினுள் இருந்த பொருட்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.