கடம்பூர் அருகே சேற்றில் சிக்கிக்கொண்ட அரசு பஸ் மீட்பு
கடம்பூர் அருகே சேற்றில் சிக்கிக்கொண்ட அரசு பஸ் மீட்கப்பட்டது.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே சேற்றில் சிக்கிக்கொண்ட அரசு பஸ் மீட்கப்பட்டது.
அரசு பஸ்
கடம்பூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடி வருகிறது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மலைக்கிராம மக்கள் காட்டாறுகளை கடந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைக்கிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பஸ் செல்கிறது. இந்த பஸ் நேற்று காலை பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் சென்று கொண்டிருந்தது.
சேற்றில் சிக்கியது
அப்போது சர்க்கரைபள்ளத்தில் சென்றபோது சேறும், கற்களுக்கும் இடையே பஸ்சின் டயர் சிக்கிெகாண்டது. பஸ் நின்றுவிட்டது. மேற்கொண்டு டிரைவரால் இயக்கமுடியவில்லை.
இதனால் பயணிகள் பஸ்சுக்குள் பரிதவித்தபடி இருந்தனர். இதை பார்த்த அங்கிருந்த மலைக்கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்த சேறு, கற்கள் சீர்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பஸ் அங்கிருந்து சென்றது.