தாளவாடி அருகே சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை; வாழைகள் சேதம்


தாளவாடி அருகே சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை; வாழைகள் சேதம்
x

தாளவாடி அருகே சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை; வாழைகள் சேதம்

ஈரோடு

தாளவாடி

தாளவாடியை அடுத்த திகனாரை, பனக்கள்ளி, எரகனள்ளி, கரளவாடி, சூசைபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திகனாரை கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் 200 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது. அதுமட்டுமின்றி கனமழையால் தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது. இதனால் மாலை 4 மணி முதல் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் தங்களுடைய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.


Related Tags :
Next Story