திம்பம் மலைப்பாதையில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்


திம்பம் மலைப்பாதையில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்
x

திம்பம் மலைப்பாதையில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்

ஈரோடு

தாளவாடி

தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தினம் தினம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் சூசைபுரம், திகனாரை, அருள்வாடி, மெட்டல்வாடி, தலமலை, பெஜலட்டி, திம்பம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் மீண்டும் இங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதே போல் திம்பம் மலைப்பாதையில் கொட்டிய கனமழையால் மலைப்பாதையோரம் திடீரென அருவிகள் தோன்றியது. இந்த அருவிகளில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மலைப்பாதை முழுவதும் மழை நீர் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். வாகனங்கள் அணைத்தும் ஊர்ந்து சென்றன. மலைப்பாதை வழியாக சென்ற பயணிகள் அப்பகுதியில் தோன்றிய புதிய அருவிகளை பார்த்து ரசித்தபடி சென்றனர்.


Related Tags :
Next Story